தேவ் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் 'கைதி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். ஹீரோயின், ரொமான்ஸ், டூயட் இல்லாமல் உருவாகும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது.

இந்த படத்தில் கார்த்தி,  கைதி வேடத்தில் நடித்திருப்பதாகவும், இதனால் இந்த படத்தின் டைட்டிலும் 'கைதி' என்றும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் சற்றுமுன் கார்த்தியின் 'கைதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ரத்தம் சொட்டும், படி வித்தியாக உருவாக்கியுள்ளனர் படக்குழுவினர்.

 

இந்த படத்தை ட்ரீம்வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வருகிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.