நடிகர் கார்த்தி 'தேவ்' படத்தை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமிட் ஆகியுள்ள படத்தில், அவருடைய அண்ணி ஜோதிகா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில், வாரிசு நடிகர்களாக அறிமுகமான சகோதர நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. ரசிகர்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக நடிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கூறி வந்த நிலையில், இருவரும் ’கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். மேலும் மற்றொரு படத்திலும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ‘கைதி’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. 

மேலும் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தியுடன், ஜோதிகாவும் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. 

ஜோதிகா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் நடிக்க உள்ளதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. முதல் முறையாக கார்த்தி, அவருடைய அண்ணி ஜோதிகாவுடன் நடிக்க உள்ளது இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எகிற செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.