பிகிலை விட பத்து மடங்கு குறைவான பட்ஜெட்டில் தயாரான கைதி வசூலில் பட்டையக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதே நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியின் அடுத்த படமான ‘சுல்தான்’ மிகவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தலைப்பில் படம் எடுக்கக்கூடாது என்று சில இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடந்து வந்த இடங்களில் தகராறில் ஈடுபட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஜ்கசியமாக நடந்து வருகிறது.

தீபாவளியில் விஜய்யின் பிகில் படத்துடன் மோதி ஜெயித்த நம்பிக்கையாலோ என்னவோ வரும் பொங்கலுக்கு மாபெரும் மலை ஒன்றுடன் மோதத்தயாராகிவிட்டனர் நடிகர் கார்த்தியும் அவரது தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும். யெஸ் கார்த்தியின் அடுத்த படமான ‘சுல்தான்’ ரஜியின் ‘பேட்ட’படத்தோடு மோத முழு மூச்சாக தயாராகி வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிகிலை விட பத்து மடங்கு குறைவான பட்ஜெட்டில் தயாரான கைதி வசூலில் பட்டையக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதே நிறுவனத்தில் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியின் அடுத்த படமான ‘சுல்தான்’ மிகவேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தலைப்பில் படம் எடுக்கக்கூடாது என்று சில இந்து அமைப்புகள் படப்பிடிப்பு நடந்து வந்த இடங்களில் தகராறில் ஈடுபட்டதால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஜ்கசியமாக நடந்து வருகிறது.

துவக்கத்தில் டிசம்பர் ரிலீஸ் என்று திட்டமிடப்பட்ட இப்படத்தை தற்போது பொங்கலன்று ரஜினியின் பேட்ட படத்தோடு ரிலீஸ் செய்ய கார்த்தியும் தயாரிப்பாளரும் முடிவெடுத்துவிட்டார்களாம். 200 கோடி பட்ஜெட்டில் தயாரான ‘பிகில்’படத்துக்கு முன்னே கதை அம்சம் கொண்ட ‘கைதி’படத்தை தான் மக்கள் ஆதரித்தார்கள். எனவே இனி கதைதான் முக்கியம். எவ்வளவு பெரிய நட்சத்திரத்தின் படத்தோடும் நல்ல கதை கொண்ட படம் மோதி ஜெயிக முடியும் என்பது அவர்களது கணக்கு. ஆனால் டிசம்பர் வரை ரிலீஸ் தேதியை அறிவிக்க மாட்டார்களாம்.அடடே பொங்கல் ரிலிஸ் இப்பவே களை கட்டுதே?