karthi cry in fan death

தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக காலடி எடுத்து வைத்து, பின் பருத்தி வீரன் படம் மூலம் நடிகராக மாறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கார்த்தி. 

கார்த்தி ஒரு நடிகர் என்பதையும் கடந்து நல்ல மனிதர். நடிகர் சங்க பொருளாளராகவும் உள்ளார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களை சந்தித்து ரசிகர்களுடன் நட்பு ரீதியாகப் பேசியும் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகர் ஒருவர் விபத்தில் அடிபட்டு உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆகிறது என்பதுதான் கொடுமை. இந்தச் செய்தியை கேள்விப்பட்ட கார்த்தி உடனடியாக அந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். ஒரு கட்டத்தில் அழுகையை அடக்க முடியாமல் கார்த்தியும் கதறி அழுதார். தற்போது அந்தப் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.