நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தியின் திரைவாழ்க்கையில் மிகமிக முக்கியமான படம் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘மெட்ராஸ்’ என்கிற உண்மை ஒருபுறமிருக்க அதே பா.ரஞ்சித்தின் அடுத்த படத்துக்கு கால்ஷீட் தர மறுத்திருக்கிறார் அவர்.

‘காலா’பட ரிலீஸுக்குப்பின்னர் சுதந்திரப்போராட்டத் தலைவர் ‘பிர்சா முண்டா’வின் சுயசரிதையை இந்தியில் இயக்கப்போவதாக அறிவித்த பா.ரஞ்சித், ராஜ  ராஜ சோழனோடு கொஞ்சம் அரசியல் விளையாட்டு நடத்தி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். நிறைய வழக்குகள் அவரை சோதிக்கவே மீண்டும் படம் இயக்கும் முடிவுக்கு வந்த அவர், இந்திப்படத்தை அடுத்த வருடத்துக்கு தள்ளிவைத்துவிட்டுத் தமிழ்ப்படம் இயக்கமுடிவு செய்ததாகவும் அதில் தனது ‘மெட்ராஸ்’பட ஹீரோ கார்த்தியை நடிக்க வைக்கவிரும்பியதாகவும் தெரிகிறது.

ஆனால் பா.ரஞ்சித் தற்போது பெரும் சர்ச்சைக்குரிய நபராக மாறியிருப்பதால், அவர் எதாவது ஒரு ரிஸ்கான சப்ஜெக்டில் கைவைத்து தன்னை சிக்கலில் மாட்டிவிடக்கூடும் என்ற பயத்தில் ‘கைவசம் ஒரு அஞ்சாறு படம் இருக்கு சார்’என்று அப்பட்டமாகக் கழண்டுகொண்டாராம். பா.ரஞ்சித்தின் அடுத்த சாய்ஸ் ஆர்யா என்கிறார்கள்.