'தேவ்' படத்தை தொடர்ந்து கார்த்தி தற்போது 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயின், டூயட் பாடல்கள் என எதுவும் இன்றி உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக 'கீதா கோவிந்தம்' நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். 

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விவேக் மெர்வின் இசையில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.