karthi acting surya production
நடிகர் கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்க்கு தயாராகி விட்டார் கார்த்தி...அண்ணன் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று ஆரம்பமானது.
பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தின் படபிடிப்பை சூர்யா தாயார் லட்சுமி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும். இதையடுத்து தென்காசியில் 40 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இந்த விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மௌனிகா, இளவரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
