கர்ணனின் வாளை தாங்கி பிடித்திருக்கும் கைகள்...! வெளியானது 'தனுஷ்' பட ஃபர்ஸ்ட் லுக்!
இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்கத்தில், தாணு தயாரிப்பில் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் இன்று தன்னுடைய 37 ஆவது பிறந்தநாளை, மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடிய புகைப்படங்களை, இவருடைய மனைவி ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தில் தனுஷ் திரும்பி இருப்பது போல் இருந்தது.
மேலும், இவருடைய பிறந்தநாளை ரசிகர்களும்... மிகவும் ஆடம்பரமாக கொண்டாட விட்டாலும், தங்களால் முடிந்தவரை, சமூக வலைத்தளத்தில் தனுஷ் பற்றிய பல விஷயங்கள் தெரிவித்து, அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். குறிப்பாக பாரதி ராஜா போன்ற மூத்த இயக்குனர்கள் தனுஷ் பற்றி பெருமையாக பேசி, தங்களுடைய வாழ்த்தை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்கத்தில், தாணு தயாரிப்பில் நடித்து வரும் 'கர்ணன்' படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை வெளியிட்ட இயக்குனர் மாரி செல்வராஜ், “நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது-கர்ணன் என்கிற வசனத்தையும் பதிவிட்டுள்ளார்.
தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில், வாள் ஒன்றை பல உழைக்கும் கைகள் பிடித்திருப்பது போல் உள்ளது. இதில் இருந்து நீதியை பற்றிய கதையை மையமாக வைத்து கர்ணன் படம் உருவாகியுள்ளது தெரிகிறது. மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சையமைத்துள்ளார். இந்த படம் கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்த பின், ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.