ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் காந்தாரா சாப்டர் 1, இப்படம் நாடு முழுவதும் அக்டோபர் 2ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
Kantara Chapter 1 Update : நாடு முழுவதும் கவனம் ஈர்த்த கன்னடத் திரைப்படம் காந்தாரா. அதன் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. சமீபத்தில் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. காந்தாராவின் இரண்டாம் பாகத்திலும் கண்கவர் காட்சிகள் இருக்கும் என்பதை முன்னோட்டம் தெளிவுபடுத்துகிறது. இப்படம் நாடு முழுவதும் 7,000 திரைகளில் காந்தாரா திரைப்படம் வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவிருக்கும் அனைத்து அப்டேட்களையும் ஹோம்பாலே பிலிம்ஸ் பக்கத்தில் காணலாம். இப்படத்தின் இரண்டாம் பாகம் அக்டோபர் 2 ஆம் தேதி கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உலகளவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் முன்னரே அறிவித்திருந்தது.

பான் இந்தியா ரிலீஸுக்கு தயாராகும் காந்தாரா சாப்டர் 1
மிகக் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காந்தாராவின் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர், இப்படத்தின் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஆங்கிலம் மற்றும் துளு பதிப்புகளும் வெளியிடப்பட்டு, அவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டின. இதனால், சினிமா ரசிகர்கள் காந்தாராவின் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ரிஷப் ஷெட்டி திரைக்கதை எழுதி இயக்கும் காந்தாரா சாப்டர் 1-ஐ விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். மூன்று வருட படப்பிடிப்பிற்குப் பிறகு இப்படம் திரையரங்குகளுக்கு வருகிறது. 2022-ல் வெளியான காந்தாராவின் முந்தைய பாகமாக (prequel) இதன் இரண்டாம் பாகம் வெளியாகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு போஸ்டர் மற்றும் டீசர் டிரெண்டிங்காகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கற்பனையும் புராணமும் கலந்த சிறந்த காட்சி அனுபவத்தை உருவாக்கிய காந்தாரா, பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பிடித்தது. அதன் இரண்டாம் பாகம் வரலாறு மீண்டும் படைக்க இன்னும் சில நாட்களே உள்ளன.
