’என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.இனியாவது அதைத் தவிர்ப்பேன் என்று சத்தியம் செய்யச்சொன்னார். ஆனால் ஒரே படத்தில் அதை மீற வேண்டி வதுவிட்டது.  ஆனால் இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால்  அந்த சத்தியத்தை மீறி அக்காட்சிகளை வைத்திருக்கிறேன்’ என்றார்.

திருடன் போலிஸ், உள்குத்து ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக்ராஜு மூன்றாவதாக இயக்கியிருக்கும் படம் ’கண்ணாடி’. சந்தீப்கிஷன்,அன்யா சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.விழாவில் பேசிய கார்த்திக்ராஜு,’உள்குத்து படம் சரியாகப் போகவில்லை. இதுபற்றி என் நண்பர்களுடன் கலந்தாலோசிப்பேன். அப்போது தான் இந்தக் கதை உதித்தது. 3 நாட்களிலேயே எழுதி முடித்து விட்டேன். சுப்பு சாரிடம் கதையைக் கொடுத்தேன். அவர் படித்து முடித்ததும் இப்படத்தைத் தயாரிக்க ஒப்புக் கொண்டார்.

தெலுங்கிலும் கொண்டு போக வேண்டும் என்று சந்தீப் விரும்பினார். ஆனால், எனக்கு தெலுங்கில் ஒரு வார்த்தைக் கூட தெரியாது என்றேன். அதற்கு அவரே உதவிபுரிந்து தெலுங்கில் தானே தயாரிப்பதாகவும் கூறினார்.சண்டைக் காட்சிகள் சவாலாகவே இருக்கும். சந்தீப் மற்றும் கருணாகரனின் காட்சிகள் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். இப்படத்தில் கடினமாக உழைத்தது நாயகி அன்யா சிங் தான். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் தெரியவில்லையென்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் மாற்றி மாற்றி நடித்தார்.

இப்படம் பெற்றோர்களுக்கு மிகவும் பிடிக்கும் விதமாக திடமான கருத்தைக் கூறும் படமாக இருக்கும்.என்னுடைய முதல் படமான ‘திருடன் போலீஸ்’ படத்தைப் பார்த்துவிட்டு என் அப்பா, படம் நன்றாக இருக்கிறது. ஆனால், புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.இனியாவது அதைத் தவிர்ப்பேன் என்று சத்தியம் செய்யச்சொன்னார். ஆனால் ஒரே படத்தில் அதை மீற வேண்டி வந்துவிட்டது.   இப்படத்தில் காட்சிக்குத் தேவைப்பட்டதால்  அந்த சத்தியத்தை மீறி அக்காட்சிகளை வைத்திருக்கிறேன்’ என்றார்.