'நெஞ்சில் ஒர் ஆலயம்' படத்தில் "சொன்னது நீதானா..." பாடல் பதிவின்போது கண்ணதாசனுக்காக காத்திருந்த எம்.எஸ்.விஸ்வநாதன், வெறுத்துப்போய் இந்த குடிகாரன் எப்போ வருவாரோ என முணுமுணுக்க, அது கண்ணதாசன் காதில் போய் சேர்ந்தது. 

பின்னர், விஸ்வநாதனிடம் சென்ற கண்ணதாசன் "சொன்னது நீதானா... சொல்" என்று கேட்க, அந்தப் அழகிய பாடல் பிறந்தது.

ஒரு முறை ரெக்கார்டிங்கில் இருந்த எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, கண்ணதாசன் இறந்து விட்டதாக தகவல் வர, ஈரக்குலை நடுங்கி கண்ணீர் முட்டிக்கிட்டு கண்ணீர் விட்டார். பதறி அடித்துக்கொண்டு கவிஞர் வீட்டுக்குசென்று பார்த்த போது, கண்ணதாசன் சோபாவில் அமர்ந்திருந்தார்.

அப்போது "டேய் விசு, நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேனு பார்க்க ஆசையா இருந்தது. அதான் அப்படி சொல்லச் சொன்னேன்" என்று அவர் கூற, பின் நிம்மதி அடைந்தார். அதுவே தன்னை மறந்து விம்மி வெடிச்சு அழுத தருணம் என்று நெகிழ்ச்சியாக கூறுவார் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.