சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தற்பொழுது உலக அளவில் நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்த கன்னட நடிகர் சிவராஜ்குமார் அவர்களின் திருமண புகைப்படங்கள் வெகு ஆண்டுகள் கழித்து இணையத்தில் இப்பொது வைரல் ஆகி வருகிறது.
கன்னட நடிகரான சிவராஜ்குமார் 1962ம் ஆண்டு மெட்ராஸில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையிலேயே தனது பட்டப் படிப்பை முடித்த அவர், எம்ஜிஆர் அரசு கல்லூரியில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் என்பதும், அண்மையில் காலமான முன்னணி கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அண்ணனும் ஆவார். கடந்த 1974ம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிவராஜ்குமார் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.
அவர் தமிழில் நேரடியாக நடித்து வெளியான முதல் திரைப்படம் ஜெயிலர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் "கேப்டன் மில்லர்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர தினத்தில் இரண்டாவது படத்தை உறுதி செய்த லெஜெண்ட் சரவணன்! வைரலாகும் செலபிரேஷன் வீடியோ!

இந்நிலையில் அவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. கடந்த 1986ம் ஆண்டு கீதா என்ற பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சென்று தம்பதிகளை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அந்த புகைப்படத்தில் சிவராஜ்குமார் அருகில் அவருடைய தந்தை ராஜ்குமார் அவர்கள் இருப்பதையும் இந்த புகைப்படத்தில் நம்மால் பார்க்க முடிகிறது. சிவராஜ்குமார் மாற்று கீதா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முன்னூறு கோடி வசூல்.. தட்டிதூக்கி மாஸ் காட்டிய டாப் 5 தென்னிந்திய திரைப்படங்கள் - ஒரு பார்வை!
