கன்னட திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள இயக்குனர் முரளி கிருஷ்ணாவின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கன்னட திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்த முரளி கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். கன்னடத்தில் காரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை முரளி கிருஷ்ணா இயக்கி உள்ளார். இவர் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்து வந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குனர் முரளி கிருஷ்ணா, மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்கு பின் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... Varisu Movie: 'வாரிசு' படத்தின் கிளைமேக்ஸ் காட்சி லீக்..! உச்ச கட்ட அதிர்ச்சியில் படக்குழு..!

முரளி கிருஷ்ணாவின் மறைவு கன்னட திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முரளி கிருஷ்ணாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மனைவி உள்ளனர்.

தொழில் ரீதியாக வழக்கறிஞராக இருந்தாலும் சினிமாவின் மீது கொண்ட மோகம் காரணமாக இயக்குனரானார் முரளி கிருஷ்ணா. பின்னர் அதில் சக்சஸ்புல் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவர் பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். இதேபோல் மகேஷ் பாபுவின் தந்தையும் பிரபல தெலுங்கு நடிகருமான கிருஷ்ணாவும் இன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... அடுத்தடுத்து பிளாப் ஆன படங்கள்... அமீர்கான் எடுத்த அதிரடி முடிவு - அஜித் போல் பிரேக் எடுக்க திட்டம்