kannada director death in water fall
கன்னட சினிமாவில் 'கனசு கண்ணு தேரேடாடா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சந்தோஷ் ஷெட்டி கடீல். தற்போது தன்னுடைய அடுத்த படப்பிடிப்பிற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில் எராமி நீர் வீழ்ச்சி அருகே தன்னுடைய நான்கு நண்பர்களுடன் சந்தோஷ் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். 
அந்த பகுதியில் தற்போது மழை பொழிவு உள்ளதால். சேறு மற்றும் வழுக்கு பாறைகள் அதிகமாக இருந்துள்ளது.
இவர் போட்டோ ஷூட் நடத்தும் போது, நீர் வீழ்ச்சியின் மேல உள்ள பாறையில் கால் வைத்துள்ளார். அப்போது திடீர் என எதிர் பாராத விதமாக கால் வழுக்கி நீர் வீழ்ச்சிக்குள் விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
சந்தோஷ் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருடைய மரணம் குறித்து அறிந்த கன்னட திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
