கார்த்தி தற்போது நடித்து முடித்துள்ள விருமன் படத்திலிருந்து கஞ்சா பூ கண்ணாலே பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி என சமூகம் சார்ந்த கிராமத்தை நாயகர்கள் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா இவர் தற்போது கார்த்தியுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் தான் விருமன். கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். அதிதி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கிராமத்து கதை அம்சம் கொண்ட இப்படத்தில் பிரகாஷ்ராஜ் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகன் தனது தந்தையை தட்டி கேட்கும் மாஸ் ஹீரோவாக வருகிறார் என சொல்லப்படுகிறது. படத்தின் பின்னணி பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்திவிடுமுறை நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் ரிலீஸாகும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றது.

இதையடுத்து கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விருமானின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் கொடுக்கப்பட்டது. அதன்படி இன்று கஞ்சா பூ கண்ணாலே என்னும் பாடல் வெளியாகியுள்ளது. லிரிக் வீடியோ வடிவில் உருவாகியுள்ள இதில் பாடல் உருவான விதம் கொடுக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை யுவன்சங்கர்ராஜா, சித்ஸ்ரீராம் இணைத்து பாடியுள்ளனர். கருமாத்தூர் மணிமாறன் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடல் வீடியோவை தொடர்ந்து அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.

YouTube video player