kanja karupu said am a next big boss head

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும், பிக் பாஸ் குடும்பத்தை ஒட்டு மொத்தமாக பார்த்துக்கொள்ள ஒரு தலைவர் தேர்தெடுக்கப்படுகிறார்.

முதல் வாரத்தில், பாடலாசிரியர் சினேகனும், இரண்டாவது வாரத்தில் நடன இயக்குனர் காயத்திரி ரகுராமும் தேர்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் எப்படியும் இந்த வாரம் பரணி அல்லது ஓவியா வெளியேற்ற படுவார்கள் என போட்டியாளர்கள் மட்டும் அல்ல கஞ்சா கருப்பும் நினைத்தார்.

ஆனால் அங்கு நடந்ததோ வேறு, கஞ்சா கருப்பு பரணி சாப்பிடும் சின்ன விஷயத்தை கூட பெரிதாக பார்த்தது,அசிங்கமாக பேசுவது, சண்டைக்கு போவது என அளவுக்கு மீறி தன்னுடைய கோபத்தை ஒரு தனிமனிதரிடமே காட்டியதால் மக்கள் கஞ்சா கருப்புக்கு எதிராக வாக்களித்து அவரை வெளியேற்றினர்.

ஆனால் இதை சற்றும் எதிர்பார்க்காத கஞ்சா கருப்பு... கயாத்திரியிடம் இந்த முறை நீங்கள் தலைவராக செயல்பட்டதை விட மிகவும் அருமையாக நான் அடுத்தமுறை தலைவனாக மாறி நடத்திக்காட்டுகிறேன் என சவால் விட்டார்.

அதே போல சினேகனும்... கஞ்சக்கருப்பை தனியாக அழைத்து அடுத்த முறை நீங்கள் தான் தலைவராக தேர்தெடுக்கப்படுவீர்கள் நீங்கள் சமையல் டீமில், ஓவியாவை தலைவராகவும் ஜூலி, ரைசா, மற்றும் வேறு யாரையாவது ஒருவரை போடவேண்டும். சமையல் எவ்வளவு கஷ்டம் என அவர்களுக்கு தெரியவேண்டும் என கூறினார்.

எப்படியும் பிக் பாஸ் குடும்பத்தின் அடுத்த தலைவர் நான் தான் என தலைக்கனத்தோடு சுற்றி கொண்டிருந்த கஞ்சாகருப்பு வெளியேற்ற பட்டது பிக் பாஸ் குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.