உச்சகட்ட எதிர்பார்ப்பு.. மிக பிரம்மாண்டமாக உருவாகும் கங்குவா - நடிகர் சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக சூர்யா 39 என்ற தலைப்புடன் அப்போது, கங்குவா திரைப்படம் உயிர் பெற்றது.

கடந்த 2019ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவுடன் அவர் இணை உள்ளதாக ஒரு சில தகவல்கள் வெளியானது. மேலும் அந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் தேதி அதிகாரப்பூர்வமாக சூர்யா 39 என்ற தலைப்புடன் அப்போது, கங்குவா திரைப்படம் உயிர் பெற்றது.
இந்த சூழலில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பில் சூர்யா இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யாவை இயக்க சிறுத்தை சிவா தயாரான நிலையில் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது திரைப்படமான "அண்ணாத்த" திரைப்படத்தை இயக்குகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இதனால் சூர்யாவின் 39 திரைப்படமாக மாறியது ஜெய் பீம், அதன் பிறகு சூர்யா தொடர்ச்சியாக பல படங்களில் கமிட்டான நிலையில் தற்போது அவருடைய 42 வது திரைப்படமாக வெளியாக உள்ளது கங்குவா. சூர்யாவினுடைய திரை வரலாற்றில் அவர் நடிக்கவிருக்கும் மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட ஒரு திரைப்படம் கங்குவா என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் 400 கோடி ரூபாய்க்கும் மேல் இந்த படத்திற்கான பட்ஜெட் உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. ஐந்து வித்தியாசமான வேடங்களில் இந்த படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு நாயகியாக இந்த படத்தில் திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் முக்கியமான வேடங்களில் மூத்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், வில்லன் நடிகர் ஆனந்தராஜ், கோவி சரளா, யோகி பாபு ரெடின் கிங்சிலே மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளர் நடராஜன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து ஒரு Glimpse காட்சியும், மாலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக சூர்யா எவ்வளவு சம்பளமாக பெற்று இருப்பார் என்ற யோசனை அவருடைய ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் வருகிறது. தற்பொழுது கிடைத்திருக்கும் சில தகவலின்படி சூர்யா இந்த படத்திற்காக சுமார் 50 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
குழந்தையை கொஞ்சும் நயன்தாரா.. செமயாக கொண்டாடப்பட்ட சண்டே - கணவர் பகிர்ந்த Cute புகைப்படம்!