குழந்தையை கொஞ்சும் நயன்தாரா.. செமயாக கொண்டாடப்பட்ட சண்டே - கணவர் பகிர்ந்த Cute புகைப்படம்!
இன்று தமிழ் திரை உலகில், முன்னணி நாயகியாக வளம் வருபவர் தான் நயன்தாரா, லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற சிறப்பான ஒரு பட்டத்துடன் பல நல்ல கதாபாத்திரங்களை ஏற்று அவர் நடித்து வருகிறார்.

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை தவிர தமிழ் திரை உலகில் உள்ள அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா.
தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றுள் அவர் தற்பொழுது நல்ல பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகிறார். விரைவில் அவருடைய நடிப்பில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது.
கோலமாவு கோகிலா படத்தில் அவர் நடித்து வந்தபோது அந்த பட இயக்குனருடன் காதல்வயப்பட்டார். இந்நிலையில் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் தனது காதலர் விக்னேஷ் சிவனை சென்ற 2022ம் ஆண்டு இவர் திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு வாடகைத்தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளையும் அவர் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கவனம் செலுத்தும் அதே நேரம், தனது குடும்பத்தினருடனும் நேரத்தை அழகாக செலவிட்டு வருகிறார் நயன்தாரா.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது மகனுடன் அவர் கொஞ்சி விளையாடும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் அவர் கணவர் விக்னேஷ் சிவன். இந்த ஞாயிற்றுக்கிழமை மிக சிறப்பாக சென்றதாகவும், என் உயிர்களுடன் நன்றாக நேரத்தை செலவிட்டதாகவும் விக்னேஷ் சிவன் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா தற்போது டெஸ்ட், இறைவன் மற்றும் அவரது 75வது பட பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இறுதியாக தமிழில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் கனெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. மேலும் அஜித்தின் 62வது படத்தை அவர் இயக்கவுதாக இருந்த நிலையில் தற்போது அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகின்றார்.