சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்.. உறுதியான ரிலீஸ் தேதி.. சென்சார் முடிஞ்சுருச்சு - ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?
தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை போலவே ஜெயிலர் திரைப்படத்திலும், இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்து முடித்துள்ளனர்.

தனது பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு சில நெகட்டிவ் கமெண்ட்களை பெற்று வருகின்ற இயக்குனர் நெல்சன் திலீப்குமார், மீண்டும் தான் யார் என்பதை நிரூபிக்க உள்ள ஒரு திரைப்படம் தான் ஜெயிலர். முதல் முறையாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குகின்றார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜயின் லியோ திரைப்படத்தை போலவே ஜெயிலர் திரைப்படத்திலும், இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்து முடித்துள்ளனர். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் உலகின் ஜாக்கி, கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் சிவ்ராஜ்குமார், பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா, நடிகர் சுனில், வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி என்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளம் நடித்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து காவாலா மற்றும் Hukum ஆகிய இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாவது தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கான சென்சார் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த படத்தின் முதல் பாதி ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் என்றும் இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் கொண்டது என்ற தகவலும் தற்பொழுது வெளியாகி உள்ளது.
கச்சிதமான உடை.. பக்கத்தில் Boy Friend - மும்பை நகரை வலம்வரும் கட்டழகி எமி ஜாக்சன்!