பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் இவருக்கு வாய்ப்புகள் தேடி சென்ற போதிலும், வலுவான கதாப்பாத்திரம் இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ள, மறைந்த தமிழக முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். 

பலரும் ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் நடிக்க கங்கனா செட் ஆக மாட்டார் என வெளிப்படையாகவே கூறினர். நடிகை ஸ்ரீரெட்டி கூட இது குறித்து அண்மையில் விமர்சித்து பேசியிருந்தார்.

இந்நிலையில், தற்போது கங்கனா, ஜெயலலிதா பற்றி தெரிந்து கொள்வதிலும், அவருடைய படங்களையும் பார்த்து பயிற்சி எடுத்து வருகிறாராம். மேலும் ஜெயலலிதாவாக நடிக்க தற்போது தன்னுடைய உடல் எடையை அதிகரிக்கவும் முயற்சி செய்து வருகிறாராம்.

ஜெயலலிதா நடிகையாக இருந்த போது எப்படி இருந்தாரோ, அப்படி சற்று ஒல்லியாகவும், அரசியலில் இருக்கும் போது, உடல் எடை அதிகரித்து இருந்தாரோ அதே போல் கங்கானாவும் உடல் எடையை அதிகரித்து நடிக்க உள்ளாராம். 

எப்படியும், 'தலைவி' படத்தில் முழு மூச்சுடன் நடித்து, ஜெயலலிதா கதாப்பாத்திரத்திற்கு பொருந்த மாட்டேன் என கேலி செய்தவர்கள் மூக்கை உடைத்தே ஆகவேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறாராம் கங்கனா.