பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வரும் திரைப்படம், 'தலைவி'. இப்படத்தின் மோஷன் போட்டேன் வெளியான போது, கங்கனா ரணாவத் சற்றும் ஜெயலலிதாவின் வேடத்திற்கு பொருந்தவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.

இதை தொடர்ந்து நேற்றைய தினம், மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'தலைவி' படத்தின் செகண்ட் லுக் வெளியானது.

இதில், ஏற்கனவே வெளியான விமர்சனங்களை தவிடு பொடி ஆக்கும் விதமாக, கங்கனா நடுத்தர வயது ஜெயலலிதாவின் லுக்கில், கட்சி கரை போட்ட சேலை கட்டிய கங்கானாவின் புகைப்படம் ஒன்று வெளியானது. 

இதில் ஆச்சு அசல் ஜெயலலிதாவை போலவே இருந்தார் என பல பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

இந்நிலையில் தற்போது ராமேஸ்வரம் சென்றுள்ள நடிகை கங்கனா, ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று புனித நீராடினார். பின் சாமி தரிசனம் செய்த  பின், டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.