சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது ரஜினி ரசிகர்கள் அனைவரும் பேட்ட படத்தின் டீஸருக்காக ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளதால்,  புரமோஷன் முழு வேகத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் 'பேட்ட' திரைப்படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும், சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இன்னொரு படமான 'காஞ்சனா 3' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

ரஜினி படத்துடன் முதல்முறையாக ராகவா லாரன்ஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ரஜினியுடன் வந்து மாஸ் காட்டவிருக்கிறார் ராகவா லாரன்ஸ். 

வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ள 'காஞ்சனா 3' படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா, ஸ்ரீமான், தேவதர்ஷினி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே காஞ்சனா, காஞ்சனா 2  ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால்... இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.