மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் அம்பரீஷின் மனைவி சுப்ரதா,  கணவர் போட்டியிட்ட மாண்டியா தொகுதியில் போட்டியிடவுள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் அம்பரீஷ், கடந்த வருடம் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.  இவர் நடிப்பில் மட்டும் சூப்பர் ஸ்டாராக ஜொலிக்காமல்,  அரசியலிலும் வெற்றி கண்டவர். கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியின் எம்பியாக இருந்தார்.

இந்நிலையில் இவருடைய மனைவியும்,  நடிகையுமான சுப்ரபாத நேற்று மாண்டியாவில் உள்ள காலபைரவர் கோவில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர்,  தன்னுடைய கணவர் போட்டியிட்ட மாண்டியா தொகுதியில்,  போட்டியிட விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் கணவர் அம்பரீஷ்,  அரசியலில் வெற்றி பெற்ற போதிலும்,  தோல்வி அடைந்த போதிலும்,  மாண்டியா தொகுதி மக்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்ததாகவும் அவருடைய அன்பை தானும் தொடர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கணவர் இணைந்து பணியாற்றிய கட்சிக்கான காங்கிரஸ் கட்சியில் தானும் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் மற்ற காட்சியில் சேரும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.  இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'முரட்டு காளை', 'கழுகு' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.