நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கனா'. கிராமத்தில் மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்த பெண் தன்னுடைய தந்தையின் கனவை நினைவாக்க இந்தியன் கிரிக்கெட் டீமில் இடம்பிடிக்க எப்படி போராடுகிறாள் என்பதை மிகவும் எதார்த்தமாக கூறி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த எதிர்ப்பார்ப்பு கிடைத்து வருகிறது.  படத்தை பார்த்த பலரும்  பெண் குழந்தை வைத்திருக்கும் அனைத்து பெற்றோர்களும், பார்க்க வேண்டிய படம் என கூறிவருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த படத்தை ஐடி துறையில் பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட ஐடி துறையில் வேலை செய்யும் பெண்கள் கலந்து கொண்டு படம் பார்த்து, படத்திற்கு பாராட்டுக்களையும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இது குறித்த ஒரு வீடியோ: