Asianet News TamilAsianet News Tamil

ரஜினியின் ‘குசேலன்’ ஸ்டைலில் ‘கனா’வில் ரசிகர்களைக் குழப்பும் சிவகார்த்திகேயன்...

டிசம்பர் 21’ ரிலீஸ் பட்டியலின் நீளம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் சிவகார்த்திகேயனின் ‘கனா’ படம் தொடர்பாக ஒரு குழப்பம் தொடர்ந்து நீடித்துவருகிறது. அது இப்படத்தில் சிவா கெஸ்ட் ரோலில் வருகிறாரா அல்லது முழுநீள வேடமா என்பது.

kana movie confusions
Author
Chennai, First Published Dec 11, 2018, 2:28 PM IST

டிசம்பர் 21’ ரிலீஸ் பட்டியலின் நீளம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் சிவகார்த்திகேயனின் ‘கனா’ படம் தொடர்பாக ஒரு குழப்பம் தொடர்ந்து நீடித்துவருகிறது. அது இப்படத்தில் சிவா கெஸ்ட் ரோலில் வருகிறாரா அல்லது முழுநீள வேடமா என்பது.

ரஜினி பசுபதி இணைந்து நடித்த ’குசேலன்’ படம் வரும்போது முதலில் அப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோல் என்பது போல சொல்லி வந்தார்கள். பிறகு ரஜினியை பெரிதாக காட்டினால் தான் பணத்தை அள்ள முடியும் என்ற எண்ணத்தோடு "இதுவொரு பக்கா ரஜினி படம்" என்று ப்ரோமோட் பண்ணப்பட்டது. kana movie confusions

ஆனால் ரஜினி, "நாம்லாம் இந்தப்படத்தில் டம்மி தாங்க" ன்னு யாருக்கும் கேட்காத குரலில் பேசிப்பார்த்தார். ஆனால் கவிதாலயா புரொடக்சன் ரஜினி ரஜினி என்று விளம்பரப் படுத்தியது. ஆனால் படத்தில் அது இல்லை. அதனால்  படமும் படுத்தது. அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படக்குழுவினரும் முதலில் , "இது பெண்ணை மையப்படுத்திய கதை. ஐஸ்வர்யா ராஜேஷ் தான் மெயின் ரோல். சிவகார்த்திகேயன் ஒரு கேமியோ ரோல் பண்ணி இருக்கிறார் என்றே விளம்பரம் செய்து வந்தனர். kana movie confusions

தற்போது பட ப்ரோமோஷனில் திடீர் மாற்றம். படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பெரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுதான் படத்தின் முக்கியமான பார்ட் என்று இயக்குநர் அருண் ராஜா காமராஜ் சொல்லி வருகிறார். இதற்கு பின்னணியில் வியாபார உத்தி இருந்தாலும், வரும் 21-ம் தேதி பெரிய படங்கள் நிறைய வர இருப்பதால் தான் இப்படியொரு விளம்பரம் என்கிறார்கள். சரி படம் பார்க்கும் ரசிகன் சிவகார்த்திகேயன் படத்தில் முழுதும் இல்லை என்றால் ஏமாந்து போவானே? என்றால் அதற்கு பதிலாக "படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலே ரசிகர்கள் படத்தோடு ஒன்றி விடுவார்கள். அங்கு வேறு கேள்விகளுக்கு இடமே இருக்காது" என்கிறது படக்குழு. 

Follow Us:
Download App:
  • android
  • ios