kamalhassan vishwaroopam 2 update

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில தினங்களாக அமெரிக்காவில் இருந்துக்கொண்டு 'விஸ்வரூபம் 2' படத்தின் படபிடிப்பில் முழுமையாக ஈடுப்பட்டுள்ளார். இதனை சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறியபோது தெரிவித்தார்.

ஏற்கனவே விஸ்வரூபம் 2 படத்தின் ஒரு சில காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில். தற்போது எடுத்து வரும் காட்சிகள் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்கனவே ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என தன்னை தயார் படுத்திக்கொண்ட கமலஹாசன்.

இப்போது 20 மணிநேரம் தூக்கத்தை தொலைத்து வேலை செய்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குகிறாராம்.

எனினும் அவர் நினைத்தபடி பட காட்சிகள் மற்றும் கிராபிக் காட்சிகள் அருமையாக வந்துள்ளதால், மிகவும் தெளிவாக உலக நாயகன் அவருடைய வேலையை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி கமலஹாசன் கடினமாக உழைக்க காரணம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட 'விஸ்வரூபம் 2' படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்பதால் தான். 

எனவே எப்போது வேண்டுமானாலும் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டு ரசிகர்களை கமலஹாசன் சந்தோஷப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.