உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

தமிழக அரசியலில் எப்படி கமல் ஆர்வம் காட்டி வருகின்றாரோ அதே போல்... இவர் நடித்து முடித்துள்ள படத்தின் வெளியீட்டிலும் கவனம் செலுத்தி வருவது அனைவரும் அறிந்ததுதான். 

கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முடிவடைந்து இந்த திரைப்படம் சென்சர் சான்றிதழுக்கு சென்றது. 

சென்சார் அதிகாரிகள் 'விஸ்வரூபம் 2' படத்தை பார்த்து விட்டு 'யூ ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்தப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் உலகநாயகன் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். மேலும் இந்த படத்தின் ரீலீஸ் தேதி திரையுலகினர் நடத்தி வரும் வேலைநிறுத்தம் முடிந்த பிறகு அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.