பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலராலும் எதிர்ப்பார்க்கப்படும் நாட்கள் என்றால் அது சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகள் தான். 

போட்டியாளர்கள் ஏதாவது தவறு செய்தால், பொது மக்கள் பார்வையில் இருந்து போட்டியாளர்களிடம் மிகவும் நாசுக்காக கேள்விகளை கேட்பார் கமல். எனவே இந்த இரண்டு நாட்களை ரசிகர்கள் மிஸ் பண்ணவே மாட்டார்கள்.

எனினும் பிக்பாஸ் வீட்டில், பெரிதாக எந்த பிரச்னையும் இந்த வாரம் வெடிக்காததால் இன்று... கமல் போட்டியாளர்களிடம்  அகம் டிவி வழியாக என்ன கேள்வி கேட்பார் என்பது அனைவருடைய எதிர்ப்பார்பாகவும் உள்ளது. 

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில்... தொகுப்பாளர் கமல் சில வசனங்கள் பேசுவது போல் வெளியாகியுள்ளது. அவை "புதிய குடும்பம்! புதிய மனிதர்கள்!
கட்டுக்கோப்பை வலியுறுத்தும் இல்லத்துள் கட்டுக்குள் அடங்க மறுக்கும் உள்ளங்கள்! உறவுகள் உதிருமா?! மலருமா?!


என்று ட்விஸ்ட் வைத்து பேசியுள்ளார். இன்று என்ன நடக்க போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.