Asianet News TamilAsianet News Tamil

Vikram Teaser: கமல் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து! செம்ம கெத்தாக என்ட்ரி கொடுத்த உலக நாயகன்!

நடிகர் கமல்ஹாசன் (Kamalhassan) பிறந்தநாளை முன்னிட்டு, 'விக்ரம்' படத்தில் (vikram Movie) இருந்து முதல் பார்வை இன்று வெளியிடப்படும் என அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் (lokesh Kanagaraj) தெரிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் ஆக்ஷன் போஸ்டர் அதிரடியாக வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 

Kamalhassan starrier Vikram movie first glance released
Author
Chennai, First Published Nov 6, 2021, 7:30 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, 'விக்ரம்' படத்தில் இருந்து முதல் பார்வை இன்று வெளியிடப்படும் என அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்த படத்தின் ஆக்ஷன் போஸ்டர் அதிரடியாக வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கிவருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதே போல், பிக்பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன், சின்னத்திரை நடிகை மைனா, மற்றும் மகேஸ்வரி என மூன்று நடிகைகள் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்: Anushka: வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கணும்... பெற்றோருக்கு அனுஷ்கா போடும் ஒரே கண்டிஷன் இது தான்?

Kamalhassan starrier Vikram movie first glance released

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வருகிறது. அனிரூத் இசையமைத்து வரும் இந்த படத்தின், 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு தயாராகி வருகிறது. இதற்காக, சென்னையில் படப்பிடிப்பு நடத்த விக்ரம் படக்குழு அனுமதி கோரியது. ஆனால் அதற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதற்கான காரணத்தையும் விரிவான பதில் கடிதத்தில் கூறி இருந்தது. அதாவது 'விக்ரம்' படக்குழுவினர் சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை அருங்காட்சியகத்தில் முக்கியமான சில காட்சிகளை படம்பிடிக்க அனுமதி தருமாறு கேட்டு இருந்தனர். படத்துக்காக அரங்குகள் அமைக்க வேண்டும், ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர். ஆனால் இதற்கு சென்னை காவல்துறையினர் சமீபத்தில் மறுப்புதெரிவித்திருந்தனர்.

மேலும் செய்திகள்: Arun Vijay: நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? பாவாடை தாவணியில் அழகு தேவதையாய் கொடுத்த போஸ்!!

Kamalhassan starrier Vikram movie first glance released

இதை தொடர்ந்து இந்த படத்திற்க்கு ஏற்ற லோகேஷனை படக்குழு தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்பட்டது. இது ஒரு புறம் இருக்க நவம்பர் 7 ஆம் தேதி உலக நாயகன் கமல் ஹாசன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக  'விக்ரம்' படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசன் கையில் துப்பாக்கியை கையில் ஏந்தியபடி உள்ள போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இந்த படத்தின் படத்தின் முதல் பார்வை (டீசர்) இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்கிற தகவலை வெளியிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்: Biggboss Tamil 5: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு குட்-பை சொல்லப்போவது இவர்கள் இருவரில் ஒருவர் தான்!!

 

Kamalhassan starrier Vikram movie first glance released

தற்போது 'விக்ரம்' படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டீசர் வெளியாகி உலக நாயகன் ரசிகர்களின் கண்களுக்கு செம்ம விருந்தாகியுள்ளது. இந்த டீசரில்... "கைதிகள் இருவர் கைகளில் துப்பாக்கியுடன் தப்பித்துச் செல்வது போன்றும், சிறையில் அதிரடியாக துப்பாக்கி சண்டை நடப்பது போன்ற காட்சிகள் உள்ளன. கமலஹாசன் குண்டு துளைக்காதவாறு மிகப்பெரிய இரும்பு கதவுகளை வைத்து முன்னேறி வரும் காட்சியோடு இன்ட்ரோ கொடுக்கிறார். வேற லெவல் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசரை பார்க்கும் போதே... படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மேலும் செய்திகள்: பணத்துக்காக இப்படியா... கூச்சமே இல்லாமல் அப்பா வயது நடிகருடன் ரொமான்ஸ் பண்ண ஓகே சொன்னாரா ஸ்ருதி ஹாசன்?

 

Kamalhassan starrier Vikram movie first glance released

உலக நாயகன், பல ஆக்ஷன் படங்களில் நடித்திருந்தாலும்... இது லோகேஷ் கனகராஜின் இயக்கம் என்பது தனியாக தெரிவது கூடுதல் சிறப்பு. அதே போல் கமல் இந்த படத்தில் கண் தெரியாதவராக நடித்துள்ளார் என்கிற தகவல் பரவிய நிலையில்... அது உண்மையா? என யோசிக்க வைத்துள்ளது இந்த டீசர். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த டீசரை ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios