ஆரம்பத்தில் மக்களால் வில்லனாக பார்க்கப்பட்ட சுரேஷ், நேற்றைய தினம் சிங்கிள் ஆளாக நின்று, கேப்ரில்லாவை தூக்கி வைத்து கொண்டு, தன்னுடைய பேத்தி ஆசையை நிறைவேற்ற கஷ்டப்படும் தாத்தாவை போல், செல்ல அதட்டலோடு வலியை தாங்கிக்கொண்டு தூக்கி பிடித்து செம்ம மாஸ் காட்டினார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கு என்பதை சொல்லி கொண்டிருந்த சுரேஷ் வார்த்தையை உண்மையாக்குவது போல் அணைத்து போட்டியாளர்களும் நடந்து கொண்டனர். கேப்ரில்லா கூடவே சுற்றி கொண்டிருந்த ஆஜித் மற்றும் பாலாஜி கூட இவருக்காக நிற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் சக்ரவர்த்தியின் இந்த செயலுக்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.  உலக நாயகன் கமல் ஹாசனும் சுரேஷை ஹீரோ என புகழ்ந்துள்ளார் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில்.

இதில் அவர் கூறியுள்ளதாவது, உள்ளேயும் முகமூடி அவிழ ஆரம்பிச்சிடுச்சி, பார்க்க பெரிய வில்லனோட அடியாள் மாதிரி இருந்தாரே, இவரோட பேச்சும் ஒரு மாதிரி இருக்கே... நல்லவரா என சந்தேக பட்டோம். ஆனால் அவர் நிஜ முகம் தெரிய வந்ததும் நல்லவருதானு தோணுது . ஹீரோவாவே மாறிடுவார் போலருகே. அப்போ நல்லவர்கள் என நினைத்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் என கேள்வியோடு இன்றைய ப்ரோமோ முடிவடைந்துள்ளது.