உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

வரும் ஜனவரியில் அமெரிக்காவில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், கமலஹாசனுக்கு மகளாக நடிப்பது மேலும் சிறப்பு.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு முன்னணி மலையாள நடிகர் இணைந்துள்ளார். மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படத்தில் ஆஷா சரத்தின் கணவராக நடித்த சித்திக் என்பவர் தற்போது 'சபாஷ்நாயுடு' படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் 'ரா' அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து வருவதாகவும், அவரை மிரட்டும் சீனியர் அதிகாரியாக சித்திக் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

சித்திக் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடித்து வரும் 'ரங்கூன்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.