kamalhassan review for shruthihassan

நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஹிந்தி படம் ‘பெஹன் ஹோகி தேரி’. இந்த படத்தின் சிறப்பு காட்சியை தன்னுடைய தந்தைக்காகவும், தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்காகவும் சென்னையில் பிரத்தேயகமாக திரையிட்டார் ஸ்ருதிஹாசன்.

படம் முடிந்ததும் பேசிய ஸ்ருதிஹாசன்,‘ இந்த படத்தை என்னுடைய தந்தைக்காகவும், என்னுடைய பள்ளிக்காலத்திலிருந்து என்னுடன் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்காகவும் சென்னையில் திரையிடப்பட்டது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் படத்தைப் பார்த்த பின்னர் படத்தைப் பற்றி என்னிடம் நிறைய பேசினார் அப்பா. அவர் எனக்கு தந்தை மட்டுமல்ல, சிறந்த விமர்சகரும் கூட. அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும்,சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கிறது.

படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது’ ஸ்ருதிஹாசன் கூறினார்.