ஜல்லிக்கட்டுக்கு தற்போது அவசர சட்டம் பிறப்பித்து கூட பல இளைஞர்கள், நிரந்தர சட்டம் கொண்டு வரும் வரை தொடர்ந்து போராட உள்ளதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மேலும் பல இடங்களில் தடியடி நடத்தி போலீசார் போராட்டக்காரர்களை விரட்டி வருவதால் தமிழகத்தில் மிகவும் அசாதரண நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் கமல்ஹாசன் தன் டுவிட்டர் பக்கத்தில் இது பற்றிய கருத்தை கூறியுள்ளார் ‘யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும் அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும் என்றும் . வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும்’ என்று கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கமல் கமல்ஹாசன் தினமும் கருத்துக்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
