பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி,இந்த வாரத்தின் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில், கமல்ஹாசன் வரும் நாட்களான சனி, மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழக்கத்தை விட, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்புகள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கும்.

அந்த வகையில், இன்றைய முதல் புரோமோவிலேயே... சாட்டையை குழற்ற தயாராகியுள்ளார் கமல் என்பது அவரது பேச்சில் இருந்தே தெரியவந்துள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள புரோமோவில்... எப்போதும் போல் வண்ண விளக்குகள் ஒளியில்... வீரநடை போட்டு வரும் கமல்... ’மாற்றி மாற்றி பேசுவதையும், குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல் அவமான படுத்துவதையும் பார்த்தோம். எதிர் கருத்து உடையவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை எத்தனை முறை சொன்னாலும் இவர்களுக்கு புரியவில்லை, என்ன செய்யலாம்' என்று  கேள்வியை எழுப்பிய வண்ணமே இந்த புரோமோ முடிவடைந்துள்ளது.

இந்த வாரத்தில் பிக்பாசை அவமதிப்பது போல் நடந்து கொண்ட அனிதா, மற்றும் ஓவராக பேசி ஆரிய அசிங்கப்படுத்திய பாலாஜி மற்றும், எத்தனை வாய்ப்புகள் கொடுத்தாலும் தன்னை திருத்தி கொள்ளாமல் அடம் பிடிக்கும் நிஷா என, ஒவ்வொருவரையும் மக்களின் கண்ணோட்டத்தில் பார்த்து... கமல் சாட்டையை சுழட்டி வீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள புரோமோ இதோ...