kamalhassan daugther akshara hassan interview

கோலிவுட்டில் உள்ள பல நாயகிகள் எந்த விதமான கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிப்பார்கள், ஆனால் மொட்டை அடித்து நடிப்பார்களா...? என்றால் சந்தேகம் தான்.

கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்த தன்ஷிகா கூட பாய் கட்டிங் போல் முடியை வெட்டிக்கொண்டாரே தவிர மொட்டை அடித்து நடிக்க வில்லை.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகன் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசனை சொல்லலாம், இவர் நடிக்கும் படத்தில் அந்த கதாபத்திரத்திற்காக எந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து நடிக்க முடியுமோ அந்த அளவிற்கு நடித்து கொடுப்பார்.

இவரை போலவே இவரது இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் தனக்கு ஒரு கதை பிடித்து விட்டால், அந்த கதைக்காக மொட்டை அடித்து நடிப்பதற்கும் தயார் என கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய 7 வயதில் நடந்த ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்த்துள்ளார், அதில் ஒரு முறை தன்னுடைய தந்தை கமல்ஹாசன் மொட்டை அடித்திருந்தார். அதை பார்த்து தனக்கும் மொட்டை அடித்து கொள்ளும் ஆசை வந்ததாகவும் அதை கூறியவுடன் , தனது தந்தை அந்த ஆசையை அவருடைய கைகளாலேயே மொட்டை அடித்து நிறைவேற்றி வைத்ததாகவும் கூறியுள்ளார்.