Asianet News TamilAsianet News Tamil

ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன... அரிய புகைப்படத்தை வெளியிட்டு எஸ்.பி.பி பற்றி உருகிய உலகநாயகன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் இன்று.
 
kamalhassan about old memories for spb balasubramaniyam
Author
Chennai, First Published Jun 4, 2021, 7:48 PM IST

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் இன்று.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபலங்களும் ரசிகர்களும்... தொடர்ந்து இந்த தேன் குரல் மன்னனின் நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில், உலகநாயகன் கமல் ஹாசனும் எஸ்.பி.பி குறித்த நினைவுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 

kamalhassan about old memories for spb balasubramaniyam

மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம்,  உலகநாயகன், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பரும் ஆவார். எனவே இவர்களது படங்களில் இவரது தேன் குரலில் ஒரு பாடலாவது இருக்க வேண்டும் என்பது பல பிரபலங்களின் ஆசை. குறிப்பாக ரஜினிகாந்தின் அறிமுக பாடலை இவர் பாடிவிட்டாலே அந்த படம் சூப்பர் ஹிட் என்று பேச பட்ட காலங்களும் உண்டு. அப்படி இவர் பாடிய முத்து, அருணாச்சலம், போன்ற படங்கள் வேற லெவலுக்கு ஹிட் ஆகியுள்ளது.

kamalhassan about old memories for spb balasubramaniyam

கடைசியாக தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'அண்ணாத்த' படத்திலும் எஸ்.பி.பி தான் அறிமுக பாடலை பாடியுள்ளார் என்பது தனி சிறப்பு. அதே போல் கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களின் பாடல்களை எஸ்பிபி தான் பாடி இருப்பார் என்பதும் அவர் கமல்ஹாசன் படத்திற்காக பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர்ஹிட் என்பதும் அனைவரும் அறிந்ததே.

kamalhassan about old memories for spb balasubramaniyam

இந்த நிலையில் இன்று எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: "அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…" என்று பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவு இதோ ...

Follow Us:
Download App:
  • android
  • ios