நடிகர் கமல்ஹாசனும், அவரது மகள் ஸ்ருதிஹாசனும் விக்ரம் பட பாடலுக்கு ஜாலியாக எடுத்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் கமல் உடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி பல்வேறு சாதனைகளை படைத்ததோடு ரூ. 450 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. கமல்ஹாசனுக்கு கம்பேக் படமாகவும் இது அமைந்தது.

நடிகர் கமல்ஹாசன் இதற்கு முன்னர் கடந்த 1986-ம் ஆண்டும் விக்ரம் என்கிற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இளையராஜா இசையில் கமல்ஹாசனின் குரலில் விக்ரம்... விக்ரம் என ஒலிக்கும் தீம் மியூசிக் மிகவும் பேமஸ் ஆனது. அந்த தீம் மியூசிக்கை ரீமிக்ஸ் செய்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்திலும் பயன்படுத்தி இருந்தார் அனிருத். அந்த ரீமிக்ஸ் செய்யப்பட்ட தீம் மியூசிக்கிற்கும் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

இதையும் படியுங்கள்... குறும்பா என் உலகே நீதான்டா... மகனின் பிறந்தநாளை பேமிலியோடு பார்ட்டி வைத்து கொண்டாடிய ஜெயம் ரவி - போட்டோஸ் இதோ

View post on Instagram

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த ரீல்ஸ் வீடியோவில் ஸ்ருதிஹாசன், இளையராஜா இசையமைப்பில் உருவான விக்ரம் பட தீம் மியூசிக்கை பின்னணியில் ஒலிக்கவிட்டு அதனை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார், இறுதியாக கமல்ஹாசன் எண்ட்ரி கொடுத்து விக்ரம் என கத்துகிறார். இந்த கியூட் வீடியோ பார்த்த ரசிகர்கள் கமல் குழந்தையாகவே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எந்த சீரியலுக்கும் கிடைத்திராத அதிகபட்ச டிஆர்பி ரேட்டிங்... புதிய வரலாறு படைத்த எதிர்நீச்சல் சீரியல்