நகைச்சுவை நடிகர் மயில்சாமி கடந்த சில தினங்களுக்கு முன் மரணமடைந்தத நிலையில், தற்போது கமல் படத்தில் பணியாற்றிய மற்றுமொரு பிரபலம் உயிரிழந்து உள்ளது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரபல சினிமா படத்தொகுப்பாளர் ஸ்ரீ ஜி ஜி கிருஷ்ணா ராவ் இன்று அதிகாலை பெங்களூருவில் காலமானார். கிருஷ்ணா ராவ் 200 க்கும் மேற்பட்ட படங்களில் படத் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார், மேலும் அவர் கே. விஸ்வநாத், பாபு, ஜந்தியாலா, தாசரி நாராயண ராவ் மற்றும் பல பழம்பெரும் டோலிவுட் இயக்குநர்களுடன் பணியாற்றி உள்ளார்.
சினிமா மீதான அவரது ஆர்வம் அவரை இணை இயக்குநர் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் போன்ற பிற துறைகளிலும் பணியாற்றச் செய்தது. தெலுங்கு மட்டுமின்றி, சில இந்தி, தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களையும் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார் ஜி ஜி கிருஷ்ணா ராவ். இவர் கடந்த 1983-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த சலங்கை ஒலி மற்றும் 1997-ம் ஆண்டு ரிலீஸ் ஆன ஏழுமலையான் மகிமை தமிழ்த் திரைப்படங்களிலும் படத் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Mayilsamy: “ஆண்டவனின் கணக்கு.. மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” - நடிகர் ரஜினிகாந்த் உறுதி

படத்தொகுப்பாளர் ஸ்ரீ ஜி ஜி கிருஷ்ணா ராவின் திடீர் மறைவு தெலுங்கு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் தாரக் ராணா மரணம் அடைந்திருந்த நிலையில், தற்போது மற்றுமொரு பிரபலம் உயிரிழந்தது தெலுங்கு திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... எம்ஜிஆர் வழியில் மயில்சாமி; நகைகளை அடமானம் வைத்து உதவி செய்து வாழ்ந்த மனிதர்!
