முத்தங்களால் கமலின் உருவத்தை வரைந்து கோவையை சேர்ந்த ராஜா என்பவர் அசத்தி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் UMT ராஜா. தங்க நகை வடிவமைப்பாளரான இவர், நடிகர் கமலஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பரிசளிக்கும் வகையில் முத்தங்களால் அவரது ஓவியத்தை உருவாக்கி அசத்தி உள்ளார். லிப்ஸ்டிக் பூசி முத்தமிட்டே நடிகர் கமலஹாசனின் முகத்தை உருவாக்கி அசத்தி உள்ளார் ராஜா. 

இது குறித்து UMT ராஜா கூறுகையில், சுமார் 8 மணி நேரம் செலவளித்து இதனை உருவாக்கி இருப்பதாகவும், வருகின்ற நவம்பர் 7ம் தேதி கமலஹாசனின் பிறந்தநாளில் அவரை சந்தித்து இதனை அளிக்க விரும்புவதாக தெரிவித்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Scroll to load tweet…

மேலும் அவரது பெயருக்கு முன் உள்ள UMT என்பதையே கமலஹாசன் நடித்த "உன்னால் முடியும் தம்பி" என்ற படத்தை பார்த்து தான் வைத்துள்ளதாக தெரிவித்தார். இதற்கு முன்பே இவர் நீரில் உருவாகும் பாசியில் கமலஹாசனின் உருவத்தை உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிற நவம்பர் 7-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தற்போதே களைகட்ட தொடங்கி உள்ளன. அன்றைய தினம் அவர் நடிக்கும் இந்தியன் 2, கமல்ஹாசன் 234 மற்றும் கல்கி ஆகிய படங்களின் அப்டேட்டுகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...வைல்டு கார்டு போட்டியாளர்களை வந்த வேகத்தில் வீட்டை விட்டு வெளியேற்றிய பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்- அதகளமான புரோமோ இதோ