kamalhaasan : கடைசி 3 நிமிடம் மட்டுமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருவதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. இப்படம் மூன்றே நாளில் ரூ.150 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கமல்ஹாசன் மிகச்சிறந்த கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. ரசிகர்களின் அன்பைக் கண்டு திகைத்துப்போன நடிகர் கமல் அவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற உள்ள தகவலையும் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது : “தரமான திரைப்படங்களை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை. திறமையான, தரமான நடிகர்களையும் தான். அந்த வெற்றி வரிசையில் என்னையும், விக்ரம் படத்தையும் ரசிகர்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம். அனிருத், கிரீஷ், எடிட்டர் பிலோமின், அன்பறிவு, சதீஷ்குமார் தொடங்கி பெயர் தெரியாமல் பின்னணியில் வேலை செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

Scroll to load tweet…

தம்பிகள் விஜய் சேதுபதி, பகத் பாசில் நரேன், செம்பன் வினோத் என வீரியம் மிக்க நடிகர் படை வெற்றியின் முக்கிய காரணங்கள். கடைசி 3 நிமிடம் மட்டுமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதைச் செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்.

இயக்குனர் லோகேஷுக்கு சினிமா பாலும், என்மேலும் இருக்கும் அன்பு படப்பிடிப்புன் ஒவ்வொரு நாளிலும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிந்தது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறாகவே இருக்கிறது” என கமல் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... Lokesh kanagaraj : கமல் கைப்பட எழுதிய ‘லைப் டைம் செட்டில்மெண்ட் லெட்டர்’.... லோகேஷின் எமோஷனல் பதிவு