kamalahassan participate industan times awards

மும்பையில் நேற்று இரவு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் நடிகர் கமலஹாசனுக்கு இந்த விழாவில் சாதனையாளர் என்கிற விருதை நடிகை ஸ்ரீ தேவி வழங்கினார். ஸ்ரீ தேவி கையால் விருதை பெற்றுக்கொண்ட கமல் கணவர் போனிகபூர் முன்பே இவரை கட்டியணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்தார்.

தற்போது நண்பர்களாக இருக்கும் நடிகர் கமலஹாசன் மற்றும் ஸ்ரீ தேவி இருவரும் 80களில் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள். அவை...'சிகப்பு ரோஜாக்கள்', 'வறுமையின் நிறம் சிகப்பு' ,'மீண்டும் கோகிலா', 'குரு' 16 வயதினிலே உள்ளிடைவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் ஸ்டைலிஷ் நடிகை என்கிற விருது நடிகை தீபிகா படுகோனுக்கும் ஸ்டைலிஷ் நடிகர் என்கிற விருது ஷாகித் கபூருக்கும் வழங்கப்பட்டது. பெண் சாதனையாளர் விருது நடிகை ரேகாவுக்கும் , சூப்பர் ஸ்டார் விருது அமிதாப்பச்சனுக்கும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.