உலக அளவில், ஊரடங்கு நடைமுறை படுத்தப்பட்டிருக்கும் இந்த நிலையில், பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் பாடல் ஒன்றை இன்று வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.

ஏற்கனவே, தன்னை தானே தனிமை படுத்தி கொண்டும்... கொரோனா எதிர்ப்பு பணிகள் பற்றிய தன்னுடைய கருத்துகளையும் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வரும் இவரின் புது முயற்சியாக ' அறிவும் அன்பும்' என்கிற பாடல் உருவாகியுள்ளது.

தற்போது நிலவி வரும் சூழ்நிலையை எடுத்து கூறும் வகையில் இந்த பாடலை, பாடியும் இயக்கியும், உள்ளார் கமல்ஹாசன். இப்பாடலை மேலும் சிறப்பாகும் விதமாக, திரையுலகை சேர்ந்த  பல கலைஞர்கள்  இந்த பாடலை கமலுடன் சேர்ந்து பாடியுள்ளனர்.

அந்த வகையில், இந்த பாடலை... அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மஹாதேவன், ஸ்ருதி ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ , சித்தார்த், லிடியன், ஆண்ட்ரியா, சித் ஸ்ரீராம், மற்றும் பிக்பாஸ் முகேன் ஆகியோர் ஒன்று செய்து இந்த பாடலை கமலுடன் பாடியுள்ளனர்.

இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரன் இசையமைத்துள்ளார். மகேஷ் நாராயணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.  பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த பாடல் இன்று (ஏப்ரல் 23 ஆம் தேதி), காலை 11 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகர் கமலஹாசன் தரப்பில் இருந்து போஸ்டர் வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகி உள்ளது.

இந்த பாடல் இதோ: