kamal wish binarayee vijayan
கேரளாவில் பிராமணரல்லாதோறும் அர்ச்சகராகலாம் !! பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் பாராட்டு !!!
கேரள கோயில்களில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதற்கு தலித் வகுப்பைச் சேர்ந்த 6 பேரின் பெயர்களும், பிராமணரால்லாதோர் 30 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் கட்டுப்பாட்டின் கீழ் 1,248 கோயில்கள் உள்ளன. அவற்றில் காலியாக உள்ள 62 அர்ச்சகர் பணியிடங்களை நிரப்புவதற்காக அண்மையில் எழுத்துத் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டன. அவற்றை மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.
அந்த அடிப்படையில் தகுதியானவர்களை பரிந்துரைக்கும் பொறுப்பு தேவஸ்வம் வாரியத்துக்கு உண்டு. அதன்படி, பிராமணியர் அல்லாத 30 பேரும், பிராமணர்கள் 26 பேரும், தலித்துகள் 6 பேரும் அப்பொறுப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, நியமிக்கப்பட்டனர்.
கேரள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாகப் பரிந்துரைப்பது இதுவே முதன்முறையாகும்.
இதனால் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்று வரும் கேரள அரசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன், தனது டுவிட்டர் பக்கத்தில் , கேரள கோவில்களில் அதாவது திருவிதாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனத்துக்கு கேரள முதல்வருக்கும், தேவஸ்தானத்துக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் வைக்கம் வீரருக்கு வணக்கம் என்றும் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
