kamal visited pattinapaakkam through whistle app
“சென்னை பட்டிணம்பாக்கம் சீனிவாசபுரத்தில் கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதுவரையில் எந்த அதிகாரிகளும் வந்து மக்களை சந்திக்கவில்லை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே வந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று விசில் செயலியில் வந்த புகாரின் பேரில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பாதிப்படைந்த இடங்களை இப்போது நேரில் சென்று பார்வையிட்டார்.

எந்த இடத்தில் தவறு நடந்தாலும், மக்கள் செய்ய வேண்டியது இந்த ஆப்ஸ் மூலம் புகார் தெரிவித்தால் போதுமானது, அந்த இடத்தில் வந்து நிற்பேன் என நடிகர் கமல் தெரிவித்து இருந்தார்.
சொன்னது போலவே தற்போது, வீடுகள் இன்றி பெரும் அவதிக்குள்ளாகி இருக்கும் மக்களை பார்த்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கான உதவிகளை செய்ய ஏற்பாடு செய்து வருகிறார் நடிகர் கமல்.
