பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் தூண்டி விடுவது மீரா தான் என, பலர் கருதி வருகிறார்கள். போட்டியாளர்களும், மீரா ஏதாவது கருத்து சொன்னால் அதில் உண்மை உள்ளதா என்பதை பார்க்காமல், அவரை கட்டம் கட்டி தாக்கி பேசுகிறார்கள் போட்டியாளர்கள்.

இந்நிலையில் கிராமத்து டாஸ்க், நடந்த போது ருக்கு வேடத்தில் நடித்த, லாஸ்லியா நாட்டாமை சேரனின் நகையை திருடி கொண்டு ஓட, அவரை ரேஷ்மா, மீரா, அபிராமி, உள்ளிட்ட பெண்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அங்கு வரும் சேரன், மீரா வயிற்றை பிடித்து, இழுத்து அந்த இடத்தில் இருந்து தள்ளி விட்டு விட்டு லாஸ்லியாவை கையில் என்ன உள்ளது என்பதை பார்த்தார்.

இது குறித்து, டாஸ்க் முடிந்த பிறகு ஒரு பிரச்சனை எழுந்தது. மீரா தன்னிடம் சேரன் முரட்டு தனமாக நடந்து கொண்டது வலியை ஏற்படுத்தியது, என கூறினார். ஆனால் இதை கண்டுகொள்ளாத போட்டியாளர்கள் அனைவரும் சேரனுக்கே ஆதரவாக பேசினார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கமல் மீராவிற்கு நடந்த அநீதிக்கு நியாயம் கிடைக்கும் என்றும், சேரன் செய்ததை சாண்டியை வைத்து நடித்து காட்ட சொல்கிறார். அதன் படி மீராவும் செய்து காட்டுகிறார். மேலும் இது குறித்த குறும்படத்தையும் போட உள்ளது தெரிகிறது.

ஆனால் ஏற்கனவே, மீரா இந்த சம்பவத்தை கூறியதால், மன உளைச்சலில் இருக்கும் சேரன், குறும்படம் போட்ட பின்பு கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்கிற முடிவை எடுப்பர் என்றே எதிர் பார்க்கப்படுகிறது. எனினும் சேரனை குறும்படம் போட்டு வச்சு செய்ய முடிவு செய்து விட்டார் கமல்.