Asianet News TamilAsianet News Tamil

’கோமாளி’படத்தில் ரஜினியை இப்படியா கிண்டல் அடிப்பீர்கள்?’...கமல் ஆவேசம்...

ஜெயம் ரவியின் ‘கோமாளி’பட டீஸரில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கிண்டலடித்திருப்பதை ஏற்றுக்கொள்ளாத கமல் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து தனது கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

kamal supports rajini in komali trailor issue
Author
Chennai, First Published Aug 4, 2019, 5:49 PM IST

ஜெயம் ரவியின் ‘கோமாளி’பட டீஸரில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கிண்டலடித்திருப்பதை ஏற்றுக்கொள்ளாத கமல் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து தனது கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.kamal supports rajini in komali trailor issue

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி,காஜல் அகர்வால்,சம்யுக்தா, யோகி பாபு மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் படம் ‘கோமாளி’.இதில் ஜெயம் ரவி ஆதிகால மனிதன் துவங்கி பல்வேறு கெட் அப்களில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. அதில் ஒரு காட்சியில் கோமா ஸ்டேஜில் இருந்து 16 வருடங்களுக்குப் பிறகு  எழும் ஜெயம் ரவி யோகிபாபுவிடம் ‘இது எந்த வருஷம் என்று கேட்க அவர் 2017 என்று கூறி ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டதாகப் பேசும் டி.வி காட்சி ஒன்றைக் காட்டுகிறார். உடனே அதையே காரணமாக வைத்து ‘இது 1996. நான் நம்ப மாட்டேன்’என்பார். அதாவது 96லிருந்து 2017 வரை தனது அரசியல் அறிவிப்பில் இருந்து எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என்று நக்கலடித்திருக்கிறார்கள்.

இந்த சர்ச்சையால் வெளியான ஒரே நாளில் 16 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ள நிலையில் தங்கள் தலைவரை தரைமட்டமாகத் தாக்கியுள்ளதால் #BoycottComali @RajnikanthEFans என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அதை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இந்த எதிர்ப்பால் அக்காட்சியை நீக்கப்போகிறார்களா அல்லது படத்தில் அப்படியே இடம் பெறுமா என்று தெரியவில்லை.kamal supports rajini in komali trailor issue

இந்நிலையில் அந்த ட்ரெயிலரைக் கண்டு கமல் கொதிப்படைந்திருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ் ட்விட் பண்ணியுள்ளார். அதில்,...நம்மவர் அவர்கள் இன்று காலை    கோமாளி ட்ரைலர் பார்த்தார். அதில்  ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே  தயாரிப்பாளருக்கு  போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக  பார்க்க முடியவில்லை  என்று கூறி வருத்தப்பட்டார் ...நட்பின் வெளிப்பாடா ..நியாயத்தின் குரலா என்று முரளி அப்பாஸ் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios