'தேவர் மகன்' சர்ச்சைக்கு மத்தியில்.. 'மாமன்னன்' படம் பார்த்த கமல்! மாரி செல்வராஜ் போட்ட நெகிழ்ச்சி பதிவு!
இயக்குனர் மாரி செல்வராஜ், 'தேவர் மகன்' படம் குறித்து பேசிய சர்ச்சை ஒரு புறம் பரபரத்துக் கொண்டிருக்க, தற்போது நடிகர் கமல்ஹாசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் போட்டுள்ள பதிவு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து தன்னுடைய தரமான படைப்புகளால் மிகக் குறுகிய காலத்திலேயே, முன்னணி நடிகர்களின் ஃபேவரட் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இந்த படத்தில் உதயநிதியின் தந்தையாக வடிவேலு நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மலையாள நடிகர் பகத் பாசில் முரட்டு வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள 'மாமன்னன்' படத்தில், இருந்து வெளியான அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலு பாடிய, ராசா கண்ணு பாடல் பலரது ரிங் டோனாக மாறியுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் 'டிமான்ட்டி காலனி 2' படப்பிடிப்பு நிறைவு..!
உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஜூலை 29ஆம் தேதி அதாவது நாளை பக்ரீத் விடுமுறையை ஒட்டி... 'மாமன்னன்' திரைப்படம் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா, மிக பிரமாண்டமாக நடந்த நிலையில், மாரி செல்வராஜ் 'தேவர் மகன்' படம் குறித்து பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடுத்து ஒரு தரப்பினர் மாரி செல்வராஜ் பேச்சுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்த நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களுடைய எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தி வந்தனர்.
மேலும் மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 'மாமன்னன்' படத்திற்கு தடை கூறி மனு தாக்களும் செய்தார். அதே போல் அனைத்திந்திய ஃபார்வேர்ட் பிளாக் கட்சி... மாமன்னன் படம் திரையிட்டால், திரையரங்கு மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுத்தது. மாமன்னன் படத்தை ஓடிடி தளங்களிலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டது. இப்படம் , இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளதாக, சில சிலர் இப்படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என கூறிய நிலையில், இப்படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் 'மாமன்னன்' படத்தை நடிகர் கமலஹாசனுக்கு, உதயநிதி மற்றும் மாரி செல்வராஜ் பிரத்தியேகமாக திரையிட்டனர். படத்தைப் பார்த்தபின் கமலஹாசன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இயக்குனர் மாரி செல்வராஜ்... போட்டுள்ள பதிவில், பெரும் பிரியத்தோடும் தீரா நம்பிக்கையோடும் என்னையும், என் படைப்புகளையும் அள்ளி அரவணைத்துக் கொண்ட கலைஞானி கமலஹாசன் சார் அவர்களுக்கு இதயத்தில் இருந்து என் நன்றியை உரித்தாக்குகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த பதிவுசமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.