‘இந்தியன்2’ பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு மிக சமீபத்திய நாட்களில்தான் பிக்பாஸ் கமல் மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கும் நிலையில், அவரது அடுத்த படமான ‘தலைவன் இருக்கிறான்’படம் வேண்டாம். அதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துகொடுங்கள்’ என்று தயாரிப்பு நிறுவனமான லைகா முரண்டு பிடித்துவருவதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கமல் இப்போதுதான்  ’இந்தியன் 2’ படப்பிடிப்புக்கு மெல்ல எட்டிப்பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.இந்தப்படத்தைத் தொடர்ந்து லைகாவின் தயாரிப்பிலேயே தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் நடந்திருக்கிறது.இப்படம் தொடங்கப் இன்னும் எவ்வளவோ  மாதங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திடீரென லைகா நிறுவனத்தின் சார்பில் கமல் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, ’தலைவன் இருக்கிறான்’ பட ஒப்பந்தத்தை இரத்து செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை. இரண்டு கதாநாயகிகள், சில இந்தி நட்சத்திரங்கள் என்று கமல் மிக ஆடம்பரமாக அப்படத்தைத் திட்டமிட்டிருக்கிறார். அதனால் அந்தப்படத்துக்குச் செய்யும் செலவுக்கேற்ப வரவு இருக்காது என்று தணிக்கையாளர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த இரத்து முடிவை எடுத்ததாம் லைகா. இதை அறிந்த கமல் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.அதைத் தொடர்ந்து கமல் நிறுவனத்தின் சார்பில் சிலர் பலமுறை லைகாவிடம் பேசியும் லைகா பிடிவாதமாக இரத்து செய்யும் முடிவில் இருந்ததாம். கடைசியில் கமலே நேரடியாக லைகா நிறுவனர் சுபாஸ்கரனுடன் பேசி, என்னை நம்புங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று உறுதி கொடுத்திருக்கிறார். அதை அரைகுறை மனதோடு இப்போதைக்கு ஏற்றுக்கொண்ட சுபாஷ்கரன் ‘இந்தியன் 2’ இனியாவது திட்டமிட்டபடி முடியாத பட்சத்தில் ‘தலைவன் இருக்கிறான்’ இருக்காது என்று மிக உறுதியாகத் தெரிவித்திருக்கிறாராம்.