பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான இன்றைய பிரமோவில் கமலஹாசன் மிகவும் சீரியாசாக பேசி இருக்கிறார். இன்று இரவு 9 மணிக்குபிக் பிக் பாஸ் பாருங்கனுசொல்றது சம்பளம் வாங்கின கடமை. அதயும் தாண்டி எனக்கு ஒரு கடமை இருக்கு. அது என்ன? இந்த கமலஹாசன் என்ன செய்ய போறேன்னு? இன்னைக்கு பார்ப்பீங்க என கோபமாக தெரிவித்திருக்கிறார் இந்த பிரமோவில்.

திடீரென கமல் இவ்வளவு சீரியசாக பேச என்ன காரணம்? என மக்களை சிந்திக்க வைத்திருக்கிறது இந்த பிரமோ. ஒருவேளை இந்த சர்வாதிகாரி டாஸ்க்கில் நடந்த விஷயங்கள் எதுவும் பிடிக்காததால் தான், கமல் இப்படி கோபமாக பேசுகிறாரா? அப்போ இன்னைக்கு பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு, குறிப்பாக ஐஸ்வர்யாவிற்கு செம டோஸ் இருக்கு போல, என குஷியாகி இருக்கின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

 

நீங்க வேடிக்கைய பாருங்க! நான் வேலைய பாக்குறேன்! 😎😎 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/n8gRti4J6v

— Vijay Television (@vijaytelevision) August 4, 2018

ஆனால் கமல் பிக் பாஸ் பற்றி பேசவில்லை. ஏதோ ஒரு சமுதாய பிரச்சனை பற்றி தான் இப்போது பேச போகிறார். என யூகித்திருக்கின்றனர் மக்கள் மையம் ரசிகர்கள். இதில் யாருடைய யூகம் சரி என இன்றிரவு 9 மணிக்கு பிறகு தெரிந்துவிடும்.