நடிகர் கமல்ஹாசன் நடித்த மன்மத லீலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் ஜெயப்ரதா. தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும், 'சலங்கை ஒலி', தசாவதாரம்', 'விஜயகாந்த் நடித்த 'ஏழை ஜாதி', உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்தார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என் மூன்று மொழி படங்களில் நடித்து, ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட இவர்...  பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக இவர் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக நடிகை ஜெயப்ரதா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியிலும், சமாஜ்வாடி கட்சியிலும் இருந்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் சார்பில் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியான ஜெயப்ரதா, அதன்பின் கடந்த 2010ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி அமர்சிங்குடன் இணைந்து ராஷ்டிரிய லோக் மன்ச் என்ற கட்சியை தொடங்கினார்.

இந்த நிலையில் தனது சொந்த கட்சியில் இருந்து வெளியேறி அவர் பாஜகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சியின் முக்கிய வேட்பாளர் ஆசிம்கான் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக ஜெயப்ரதாவை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், ஒரு தகவல் வெளியாகியுள்ளது.